பள்ளப்பட்டி நகராட்சி சார்பில் வரிகளை செலுத்த உத்தரவு
வரி செலுத்த அறவிப்பு
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா பகுதியில் உள்ளது பள்ளபட்டி நகராட்சி. இந்த நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொது மக்கள், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், நகராட்சி கடைகளுக்கான வாடகை, கடைகளுக்கான லைசன்ஸ் புதுப்பிப்பு உள்ளிட்ட வரி இனங்களை செலுத்த வேண்டும் எனக் கூறி நகராட்சிக்கு சொந்தமான சரக்கு வாகனத்தில் பொருத்தப்பட்டு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.
மேலும்,பள்ளப்பட்டி நகராட்சியை சேர்ந்த பொதுமக்கள் எவரேனும் வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்கள் ஆன்லைன் மூலமாகவும் அவர்கள் செலுத்த வேண்டிய வரி இனங்களை செலுத்தலாம் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளப்பட்டி நகர் முழுவதும் இந்த அறிவிப்பு செய்யும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.