ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு
By : King 24X7 News (B)
Update: 2023-11-16 11:54 GMT
மனு அளித்தவர்கள்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், உத்தமனூர் குரூப் கொடிமங்கலம் பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து கண்மாய்க்கு செல்லும் தண்ணீரை செல்ல விடாமல் தடுத்து மக்கள் பாதிப்படையும் வகையில் செயல்படுவதாகவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுக்கக்கோரி கொடிமங்கலம் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்