அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.;
Update: 2024-01-08 02:56 GMT
அண்ணாமலை பல்கலைக்கழகம்
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம், இணைப்புக் கல்லூரிகளில் நடைபெறவிருந்த அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது.