சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம்
By : King 24X7 News (B)
Update: 2023-11-11 04:55 GMT
காஞ்சிபுரம் ரயில்வே சாலைக்கும், கோனேரிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட அசோக் நகருக்கும் இடையே, இருப்புப்பாதையின் கீழ் ரயில்வே மினி சுரங்கப்பாதை உள்ளது. இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சென்று வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்த மினி சுரங்கப்பாதையின் உட்புறத்தில், சாலை சேதமடைந்த பள்ளமாக உள்ளது. இதனால், சாதாரண மழைக்கே, சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர், சகதி நீராக மாறியுள்ளது.
இருசக்கர வாகன ஓட்டிகள், சாலை சேதமடைந்த பகுதியில், நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்குள், சுரங்கப்பாதை சாலையை சீரமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்."