ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை

மயிலாடுதுறையில் அஜித்குமார் என்ற ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2024-03-21 01:05 GMT

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார்(26). கடந்த 2022-ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் நடைபெற்ற வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர்  ரவுடி கண்ணன் படுகொலையில் ஈடுபட்ட  20பேரில் இவரும் ஒரு குற்றவாளியாவார்.  2022ஆம் ஆண்டு மயிலாடுதுறை காவல் நிலைய ரவுடி பட்டியலில் சேர்க்க பட்ட இவர்.குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர்.   வன்னியர் சங்க பிரமுகர் ரவுடி கண்ணன் கொலை வழக்கின் வாய்தாவிற்காக  மயிலாடுதுறை நீதிமன்றத்தில்  ஆஜராகிவந்துள்ளார். நேற்று இரவு மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயில் தெற்கு வீதி பகுதியில் அவர் இருசக்கர வாகனத்தில் நாய் ஒன்றை எடுத்துக் கொண்டு உறவினர் சரவணன் உடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் அவர்களை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் வெட்டியது.

இதில் தலை முழுவதுமாக சிதைந்த நிலையில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த சரவணன்  கையில் வெட்டுக் காயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட தப்பித்து ஓடி அருகில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து பின்வாசல் வழியாக சென்று பதுங்கியிருந்தவர், பின்னர் மீட்கப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர்  அனுப்பி வைக்கப்பட்டார்.  சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த அஜித்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  சம்பவ இடத்தில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மீனா நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.   இந்நிலையில் ரவுடி கண்ணன் படுகொலைக்கு பழிக்குப் பழியாக இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

படுகொலை காரணமாக மேலும் மோதல்கள் ஏற்படாமல் தடுக்க காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித்குமார் உறவினர்கள் மருத்துவமனை அருகே மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து பேருந்து நிலையம் அருகே மறியல் போராட்டத்தை   தொடர்ந்து 3மணி நேரத்திற்கு பிறகு கைவிட்டு மருத்துமனைக்கு சென்றனர். 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலையில் இறந்த வன்னியர் சங்க பிரமுகர் ரவுடி கண்ணன் வசித்து வந்த கொத்தத்தெருவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Live Updates
Tags:    

Similar News