கடலூரில் இன்று பள்ளி, கல்லூரிகள் இயங்கும் - ஆட்சியர்
Update: 2023-12-04 02:04 GMT
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் பெரிய அளவு மழை ஏதும் இல்லாத காரணத்தால் கடலூர் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகள் இன்று 4 ஆம் தேதி வழக்கம் போல் செயல்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.