பாடகி பவதாரிணி உடல் நல குறைவால் காலமானார்
இளையராஜா மகளும் பாடகியுமான பவதாரிணி காலமான செய்தி இசை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.;
Update: 2024-01-26 00:51 GMT
பவதாரிணி
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி (47) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்தவர். இலங்கையில் சிகிச்சை மேற்கொண்டார். புற்று நோய் காரணமாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், ஆயுர்வேத சிகிச்சைக்காக சமீபத்தில் இலங்கை சென்றுள்ளார். ஆயுர்வேத சிகிச்சை பலனளிக்காத நிலையில் இலங்கையில் காலமானார். இன்று மாலை உடல் சென்னை வருகிறது. இவர் 'ராசய்யா' படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர்.