கரூர் ஆணையரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம்

கரூர் மாநகராட்சி ஆணையர் சுதாவை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி ஊழியர்கள் வேலையை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-02-06 14:31 GMT

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் 

கரூர் மாநகராட்சியில் நிரந்தர பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள் 150 க்கு மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மேற்கொண்டு வரும் பணிகளுக்கு முறையான பயிற்சி பெற்றவர்கள் அல்ல.

அவர்களை தேவைக்கேற்றவாறு பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் ஆணையர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட சுதா தொகுப்பூதியம் பெறும் ஊழியர்கள் விஷயத்தில் கடுமையாக நடந்து கொண்டுவராக புகார் எழுந்துள்ளது. பணி நேரத்தில் ஊழியர்களை தரக்குறைவாகவும்,

வேலை நேரத்திற்கு கூடுதலாகும் பணியாற்ற கட்டாயப்படுத்துவதாகவும், தனிப்பட்ட ஊழியர்களின் விஷயங்களில் தலையிடுவதாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் தொகுப்பூதியம் பெறும் பணியாளராக பணியாற்றி வந்த ராஜசேகரி என்ற பெண்ணை ஆணையர் சுதா நேற்று மாலை பணி இடை நீக்கம் செய்துள்ளதாக அறிந்த ஊழியர்கள், தங்களுக்கும் இது போல் டார்ச்சர் செய்வதற்கு வாய்ப்புள்ளதாக கருதி இன்று மாநகராட்சி அலுவலக வாளாகத்தில் பாதிக்கப்பட்ட 40 ஊழியர்கள் இன்று பணியை புறக்கணித்துவிட்டு,

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநகராட்சி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News