ஆணையரை இடமாற்றம் செய்ய பணி ஊழியர்கள் பேட்டி
கரூர் மாநகராட்சி ஆணையரை இடமாற்றம் செய்யாவிட்டால், தற்கொலை செய்து கொள்வேன். பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் பேட்டி
By : King 24x7 Angel
Update: 2024-02-06 06:05 GMT
கரூர் மாநகராட்சி ஆணையரை இடமாற்றம் செய்யாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன். பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் பேட்டி. கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்களை கொண்டு பணி நடைபெற்று வருகிறது. மாநகராட்சியில் அண்மையில் சுதா என்பவர் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பொறுப்பேற்றதிலிருந்து ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதும், தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவது என பலதரப்பட்ட நிலைகளில் டார்ச்சர் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெண் ஊழியர் ராஜசேகரி என்பவரை நேற்று மாலை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார் ஆணையர் சுதா. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகவும், தங்களையும் இதுபோல் டார்ச்சர் செய்வதாக கூறி, மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்கள் சுமார் 40 பேர் இன்று திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் மாநகராட்சி அலுவலக வாயிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சஸ்பென்ட் செய்யப்பட்ட ராஜசேகரி கூறும்போது, கரூர் மாநகராட்சி ஆணையரை இடமாற்றம் செய்யாவிட்டால், எனது வேலை போனாலும் பரவாயில்லை, நான் தற்கொலை செய்து கொள்வேன் என கூறினார்.