அரூரில் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்து உலக சாதனை

அரூரில் அரசு மற்றும் தனியார் பள்ளியே சேர்ந்த 1100 மாணவ மாணவிகள், ஒரே இடத்தில் 38 நிமிடங்களில் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்து உலக சாதனை படைத்தனர்.

Update: 2023-12-24 16:01 GMT

அரூரில் அரசு மற்றும் தனியார் பள்ளியே சேர்ந்த 1100 மாணவ மாணவிகள், ஒரே இடத்தில் 38 நிமிடங்களில் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்து உலக சாதனை. அரூர்,டிச.24/12/2023: தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் இணைந்து யோகா செய்து உலகை சாதனையில் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 1100 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, ஒரே நேரத்தில் யோகா செய்தனர. யோகாசனத்தில் சூரிய நமஸ்காரத்தை 108 முறை செய்தனர். இதனை 38 நிமிடங்களில் 1100 மாணவ மாணவிகள் செய்து முடித்தனர். இதற்கு முன்பு ஒரே இடத்தில் பள்ளி மாணவ மாணவிகள் சூரிய நமஸ்காரம் 50 முறை 27 நிமிடங்களில் செய்திருந்தனர்.

ஆனால் அரூரில் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் 108 முறை சூரிய நமஸ்காரத்தை 38 நிமிடங்களில் செய்தது நாவல் வேர்ல்ட் ரெக்கார்ட் என்ற நிறுவனம் உலக சாதனை என அறிவித்து மாணவ மாணவிகளை பாராட்டியது. மேலும் மாணவ மாணவிகளை வைத்து யோகாசனம் செய்த சக்திவேல் என்பவருக்கு யோகாசனத்தில் சூரிய நமஸ்காரத்தை 38 நிமிடங்களில் 108 முறை செய்ததும், ஒரே இடத்தில் 1100 மாணவர்கள் இணைந்து செய்தது சாதனை என பாராட்டி, பாராட்டு சான்றிதழையும், பதக்கங்களையும் வழங்கினர்.

Tags:    

Similar News