திருச்செந்தூர் கடலில் நீராட தடை
By : King 24X7 News (B)
Update: 2023-11-14 09:31 GMT
இலங்கை அருகே கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து தென்கிழக்கே 1,326 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பெருத்த சேதம் இருக்காது என தெரிகிறது.
சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இந்த நிலையில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கடல் பகுதியில் பக்தர்கள் யாரும் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் கடலோர காவல் படை மற்றும் உள்ளூர் போலீசார் கடற்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்று வருவதால் பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றன