குழந்தை கடத்தலில் ஈடுப்பட்ட இருவர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தை கடத்தல் தொடர்புடைய இருவர் கைது செய்ததோடு 4 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக ஐஜி கண்ணன் தெரிவித்தார்.

Update: 2024-03-20 01:37 GMT

குழந்தை கடத்தலில் ஈடுப்பட்டவர்கள் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் கடத்தப்பட்ட நான்கு குழந்தைகள் மீட்கப்பட்டு மூன்று குழந்தைகள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ஒரு குழந்தைக்கான பெற்றோரை காவல்துறையினர் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடத்தல் தொடர்பாக ஆலங்குளத்தை சேர்ந்த கருப்பசாமி மற்றும் ராஜன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தென் மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் தெரிவித்தார்.

மேலும் குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகளை சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றவர்களுக்கு பரப்ப வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 21.12.2022 அன்று ஒரு 2 ½ வயது குழந்தையும், குலசேகரன்பட்டிணம் காவல் நிலை எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 21.10.2023 அன்று ஒரு 2 வயது குழந்தையும் மற்றும் தூத்துக்குடி அந்தோனியார் கோவில் பகுதியில் கடந்த 09.03.2024 அன்று ஒரு 4 மாத குழந்தையும் காணவில்லை என சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் பெற்றோர்களால் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து குழந்தைகளை கடத்தியவர்களை கண்டுபிடிக்க, குழந்தைகளை மீட்க 10 தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வந்தனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்து, விசாரித்தபோது, இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களான ஆலங்குளம், அண்ணாநகர் தெருவைச் சேர்ந்த சாமி (எ) கருப்பசாமி (வயது 47) என்பதும் ஆலங்குளம் கரும்பனூர் பகுதியைச் சேர்ந்த ராஜன் (எ) ராஜா (வயது 53) என்பதும், ஆகிய இருவரும் 4 குழந்தைகளை கடத்தியதும், அவர்கள் இந்த குழந்தைகளை குழந்தையில்லாதவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கடத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து, இதுவரை புகார் அளிக்காத ஒரு குழந்தை உட்பட 4 குழந்தைகளும் மீட்கப்பட்டன. மேலும் மீட்கப்பட்ட 4 குழந்தைகளையும் ‘குழந்தைகள் நல குழு” (Child Welfare Committee) மூலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்க இரவு, பகலாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தனிப்படை போலீசாரை மதுரை தென் மண்டல காவல்துறை தலைவர் கண்ணன், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ்குமார் மற்றும் மாவட்டட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் ஆகியோர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினர். இதைத்தொடர்ந்து தென்மண்டல ஐஜி கண்ணன் இல்லை செய்தியாளரிடம் பேசும் போத,

குழந்தை கடத்தல் சம்பவம் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் கடத்தல் கும்பலிடம் இருந்து நான்கு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன இதில் 3 குழந்தைகளின் பெற்றோர்கள் கண்டறியப்பட்டு அவர்களிடம் குழந்தைகள் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பெற்றோர்கள் கண்டறியப்படாத ஒரு குழந்தையும் கடத்தல் கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது அந்த குழந்தைக்கு காண பெற்றோரை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

மேலும் தமிழகத்தில் குழந்தை கடத்தல் தொடர்பாக வதந்திகளை பொதுமக்கள் செல்போனில் மற்றவர்களுக்கு பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் கொடுத்த தென் மண்டல காவல்துறை தலைவர் செல்போனில் வரும் தகவல் குறித்து அருகே உள்ள காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வேண்டுமென அவர் கூறினார் மேலும் அவர் கூறுகையில் அந்தோணியார் கோவில் பகுதி அருகே ஒரு நான்கு மாத பெண் கைக்குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில் பத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடியதில் நான்கு குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் இந்த கடத்தப்பட்ட குழந்தைகள் அனைத்தும் ஆலங்குளம் பகுதி அருகே குழந்தை இல்லாமல் தவித்து வந்த பெற்றோரிடம் பணத்திற்காக இந்த கடத்தல் கும்பல் விற்பனை செய்து இருப்பதும் தெரியவந்துள்ளது கடத்தப்பட்ட குழந்தைகளை வாங்கிய பெற்றோர்கள் மீது சட்ட வல்லுநர்கள் ஆலோசனைக்கு பின்பு தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News