கந்துவட்டி கொடுமை: இருவர் கைது
By : King 24X7 News (B)
Update: 2023-11-16 11:52 GMT
கைதானவர்
மானாமதுரை சாஸ்தாநகரை சேர்ந்தவர் ராஜேஸ்கண்ணன் மனைவி சண்முகபிரியா. இவர் அண்ணாமலைநகர் பகுதியை சேர்ந்த பாலுச்சாமி மகன் வீராச்சாமி என்பவரிடம் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு 3 லட்சம் கடன் பெற்று ரூபாய் 1 லட்சத்து 97 ஆயிரம் வட்டி கட்டியுள்ளார்.
இந்நிலையில் கூடுதல் வட்டி கேட்டு அவரை தொந்தரவு படுத்தியதாகவும், அதேபோல் அதே பகுதியை சேர்ந்த பழனியாண்டி மகன் பாண்டி என்பவரிடம் அன்னலட்சுமி என்பவர் ரூபாய் 50 ஆயிரமும், சரவணன் என்பவர் 3 லட்சமும் கடன் பெற்ற நிலையில் பாண்டி கூடுதல் வட்டி கேட்டு மிரட்டியதாகவும் சிப்காட் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் இவர்கள் இதேபோன்று பலருக்கு பணம் கொடுத்து வட்டி வசூல் செய்தது தெரியவந்த நிலையில் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்