வடலூரில் வஜ்ரா வாகனம் வரவைப்பு

வடலூரில் பாமக சார்பில் போராட்டம் நடைப்பெற இருப்பதால் காவல்துறையினர் வஜ்ரா வாகனத்தை வரவைத்தனர்.

Update: 2024-02-17 08:26 GMT

பாதுகாப்பு வாகனம் 

கடலூர் மாவட்டம் , குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர் பார்வதிபுரம் பகுதியில் உள்ள பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்க பாட்டாளி மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தவுள்ளதால் இன்று சத்திய ஞான சபை அருகில் வஜ்ரா வாகனத்தை பாதுகாப்பு கருதி காவல் துறையினர் நிறுத்தி வைத்துள்ளனர்.

இது மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Similar News