வேங்கை வயல் வழக்கு: டிசம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
வேங்கை வயல் வழக்கு டிசம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-05 15:11 GMT
நீதிமன்றம்
புதுக்கோட்டை வேங்கை வயல்-லில் கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி அங்கு வசிக்கும் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பான வழக்கு டிசம்பர் எட்டாம் தேதிக்கு ஒத்திவைக்கபபடுள்ளது.
உண்மை கண்டறியும் சோதனை நடத்தக்கோரி சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை கோர்ட்டில் மனு செய்திருந்தனர் சிபிசிஐடி மனு மீதான விசாரணையை டிசம்பர் 8க்கு ஒத்திவைத்தது, புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம். வழக்கு தொடர்பான டிஎஸ்பி உள்ளிட்டோர் சென்னை சென்று திரும்ப முடியாத சூழலில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.