விசிக தலைவர் திருமாவளவன் மீண்டும் சிதம்பரம் தொகுதியில் போட்டியா?
விசிக தலைவர் திருமாவளவன் மீண்டும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-18 10:00 GMT
திருமாவளவன்
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019 தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.