தூத்துக்குடியில் பழிக்கு பழியாக இளைஞர் படுகொலை

தூத்துக்குடியில் பலிக்கு பலியாக மாரியப்பன் என்ற இளைஞர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2023-10-22 14:09 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள சலவை தொழிலாளர் கூடத்தில் அமைந்துள்ள மந்திர விநாயகர் திருக்கோயில் எதிரே உடல் இல்லாமல் தலை மட்டும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக தென்பாகம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான காவல்துறையினர் அந்தப் பகுதியில் இருந்து தலையை எடுத்துச் சென்றனர்.

விசாரணையில் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டது தூத்துக்குடி tmb காலனி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பது தெரியவந்தது. இதை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தலை இல்லாமல் அவரது உடல் தூத்துக்குடி மையவாடி பகுதியில் இருப்பது தெரியவந்தது.

Advertisement

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாரியப்பன் கடந்த ஏப்ரல் மாதம் மாதம் அவரது உறவினரான சப்பானி முத்து என்பவரை சலவை கூடத்தில் வைத்து தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.

இதற்கு பழிக்கு பழியாக சப்பானி முத்துவின் உறவினர்கள் இன்று மாரியப்பனை கொடூரமாக தலை துண்டித்து படுகொலை செய்திருப்பது தெரிய வந்தது தூத்துக்குடியில் பழிக்கு பலியாக தலை துண்டித்து மாரியப்பன் என்ற வாலிபர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

Similar News