முத்தாயம்மாள் கலைக் கல்லூரியில் உலக சுற்றுலா தின கொண்டாட்டம்
ராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) யின் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை சார்பாக உலக சுற்றுலா தினம் கொண்டாடபட்டது.
இந்நிகழ்ச்சியில் காய்கறி மற்றும் பழங்களில் உலக அதிசியங்களான இந்தியாவின் தாஜ்மஹால், இத்தாலியின் சாய்ந்த கோபுரம், பிரான்ஸின் ஈபெல்கோபுரம், சீனபெருஞ்சுவர் இந்திய விண்வெளி துறையின் சாதனையை பாராட்டும் வகையில் ராக்கெட்டுகள், மிக அழகாக செதுக்கப்பட்டிருநத்ன. இவற்றோடு கல்லூரியின் பெயர் மற்றும் பூக்கள் மற்றும் பேக்கரி வகைகளான திருமண கேக்குகள், நிறைய பேஸ்ட்ரி வகைகளும் சர்வதேச தரத்தில் காட்சிபடுத்தபட்டிருந்தன.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர், முனைவர் எஸ்.பி.விஜயகுமார், நிர்வாக புலமுதன்மையர், முனைவர் எம்.என்.பெரியசாமி, தேர்வுகட்டு; பாட்டு அலுவலர், முனைவர் பி.கௌரி சங்கர் மற்றும் சமூக செயல்பாட்டு தலைவர், முனைவர் எம்.இராமமூர்த்தி ஆகியோர் வருகை புரிந்து காட்சிபடுத்தப்படட் பொருட்களைக் கண்டு மாணவர்களின் திறனை மகிழ்ந்து பாராட்டினர்.