காவேரிப்பட்டிண: ம்காவல் நிலையத்தில் பொங்கல் விழா மாவட்ட எஸ்.பி. பங்கேற்பு.

காவேரிப்பட்டிண: ம்காவல் நிலையத்தில் பொங்கல் விழா மாவட்ட எஸ்.பி. பங்கேற்பு.

Update: 2025-01-15 03:36 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் காவல் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காவல் இன்ஸ்பெக்ட்டர் சரவணன் தலைமையில் காவல் நிலையம் முன்பாக பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து காவலர்கள் மற்றும் அவரது குழந்தைகளுக்கும், பாட்டுப் போட்டி, கயிறு இழுத்தல், கோலப்போட்டி, உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட எஸ்.பி. காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை கலந்து கொண்டு பரிசுகளை வழங்கின்ர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முரளி, காவல் உதவி ஆய்வாளர்கள் சிவசந்தர், அறிவழகன் மற்றும் காவலர்கள், அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Similar News