மூத்த வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சான்றிதழ்
சர்வதேச முதியோர் தினத்தையொட்டி தேவூர் பகுதியில் மூத்த வாக்காளர்கள் 90 பேருக்கு சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் லோகநாயகி சால்வை அணிவித்து வேட்டி, சேலை கொடுத்து கெளரவித்தார். முன்னதாக சுண்ணாம்புக்கரட்டூரில் பூவாயி என்ற மூதாட்டி 108 வருடம் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார். இவர் 25முறை தவறாமல் வாக்களித்து வந்ததாகக் கூறினார்.இதனையடுத்து சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் லோகநாயகி சர்வதேச முதியோர் தினத்தையொட்டி பூவாயி அம்மாள் வீட்டிற்கு நேரில் சென்று சென்று இந்தியத் தேர்தல் ஆணையம் அளித்த சான்றிதழைக் கொடுத்து நலம் விசாரித்தார். பின்னர் வேட்டி சேலை கொடுத்து சால்வை அணிவித்து கெளரவித்தார்.
இதனையடுத்து தேவூர் சமுதாய கூடத்தில் 80 வயதைக் கடந்து தேர்தலில் வாக்களித்து வரும் 90 மூத்த வாக்காளர்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அளித்த சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் சங்ககிரி தேர்தல் பிரிவு துணை தாசில்தார் தமிழ்செல்வி, தேவூர் வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி, தேவூர் கிராம நிர்வாக அலுவலர் அருள்முருகன், கருப்பண்ணன் செந்தில்குமார் உள்ளிட்ட வருவாய் துறையினர் திரளாக கலந்து கொண்டனர்.