நாமக்கல்லில் மூவர் கூடைப்பந்து போட்டி- இராஜேஸ்குமார் எம்.பி பரிசு வழங்கினார்

Update: 2023-10-03 08:00 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல்லில் நடைபெற்ற மூவர் கூடைப்பந்து போட்டியில், வெற்றிபெற்ற வீரர்களுக்கு, ராஜ்யசபா எம்.பி இராஜேஸ்குமார் கோப்பையை வழங்கினார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மற்றும் நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில், புதிய முறையிலான மூவர் கூடைப்பந்து போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. புதிய முறையில் ஒரு அணிக்கு மூவர் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில், அரை மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெற்றன. ஒரு போட்டிக்கு 10 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 700 மாணவ மாணவிகள் மற்றும் கூடைப்பந்து வீரர்கள் வீராங்கணைகள் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகளை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ. ராமலிங்கம் துவக்கி வைத்தார்.

நிறைவு விழாவிற்கு மாவட்ட கூடைப்பந்து சங்க தலைவர் நடராஜன், பொருளாளர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இராஜேஸ்குமார் தலைமை வகித்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். சிறந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட திமுக அவைத்தலைவர் மணிமாறன், நகர திமுக செயலாளர் ராணா ஆனந்த், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.விஸ்வநாத், நகராட்சித் தலைவர் கலாநிதி, துணைத் தலைவர் பூபதி, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் தீபக், மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் அமைப்பாளர்கள் பிரபு, சுரேஷ் குமார், ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் முரளி, கூடைப்பந்து சங்க நிர்வாகிகள் ஜெகதீசன், ஜீவா, சிவக்குமார் ஆகியோர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News