பொம்மம்பட்டியில் விலையில்லா மிதிவண்டிகள் எஸ்.எம்.மதுரா செந்தில் வழங்கினார்
எஸ்.எம்.மதுரா செந்தில்
நாமக்கல் மேற்கு மாவட்டம் எலச்சிபாளையம் கிழக்கு பொம்மம்பட்டியில் ரூ.12 1/2 லட்சம் மதிப்பீட்டில், அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது. ஒன்றிய திமுக செயலாளர்கள் எம்.தங்கவேல், செல்வராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பொம்மம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.எஸ்.ஆர்.துரைசாமி, ஒன்றிய திமுக செயலாளர்கள் எம்.தங்கவேல், செல்வராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட திமுக துணை செயலாளர் சாந்தி, எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய திமுக அவைத் தலைவர் புத்தூர் ஆர்.ராஜ், ஒன்றிய பொருளாளர் லட்சுமணகுமார், மாவட்ட பிரதிநிதி ராமசாமி, மாணவர் அணி அமைப்பாளர் பாலசுப்பிரமணி, விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கந்தசாமி, விவசாய அணி துணைத் தலைவர் வேலுசாமி, இலக்கிய அணி துணை அமைப்பாளர் இந்து ஆர். சேகர், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் டி.கே.ராஜா மற்றும் நிர்வாகிகள் நவநீதன், ஆர்.கே.சாமி, திருநாவுக்கரசு, இறையம்பட்டி சேகர், செல்வம், நல்லதம்பி, உதயகுமார், அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.