திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2023-10-07 11:58 GMT

ஆர்ப்பாட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 நாகர்கோவிலில் அருந்ததியர் சமூக மக்களுக்கு பட்டா கேட்டு அறவழியில் போராடிய திராவிட தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் நெல்லை கதிரவன் மாநில நிதிச் செயலாளர் தோழர் சு.க.சங்கர், உள்ளிட்ட 250 க்கும் மேற்பட்ட தோழர்கள் மீது தாக்குதல் நடத்தி பொய் வழக்கு புனைந்து 9 தோழர்களை சிறைபடுத்தியுள்ள நாகர்கோவில் காவல்துறையை கண்டித்து, நாமக்கல் மாவட்ட திராவிடத்தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் கோபிநாத் அவர்களின் தலைமையில்

கண்டன ஆர்ப்பாட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளர் தோழர் செல்வ முருகேசன் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்... ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.....

Tags:    

Similar News