பாப்பிரெட்டிப்பட்டியில் திமுக அரசை கண்டித்து போராட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ஊராட்சியை பேரூராட்சி உடன் இணைத்ததை கண்டித்து பொதுமக்கள் எம்எல்ஏ தலைமையில் போராட்டம்
தமிழகத்தில் புதிய பேரூராட்சிகளை உருவாக்கியும் நகராட்சிகளில் ஊராட்சிகளை இணைத்தும் தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு ஆணையை வெளியிட்டது இதனை அடுத்து, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் வெங்கடசமுத்திரம் ஊராட்சியை பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியோடு இணைக்கும் திமுக அரசை கண்டித்து பொதுமக்கள் கவன ஈர்ப்பு பேரணியை இன்று ஜனவரி 03 நடத்தினர். இந்த கவன ஈர்ப்பு பேரணியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி கலந்து கொண்டு போராடத்தை தொடங்கினர் இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.