மதுராந்தகம் அருகே கன்டெய்னர் லாரி தலை குப்புற கவிழ்ந்து விபத்து.
மதுராந்தகம் அருகே கன்டெய்னர் லாரி தலை குப்புற கவிழ்ந்து விபத்து.
மதுராந்தகம் அருகே கன்டெய்னர் லாரி தலை குப்புற கவிழ்ந்து விபத்து. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள நல்லாமூர் மாநில நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சூனாம்பேடுக்கு டைல்ஸ் ஏற்றிக்கொண்டு சென்ற கண்டைனர் வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலை குப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் கன்டெய்னர் லாரி ஓட்டி வந்த டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.இதுகுறித்து சித்தாமூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.