காணாமல் போன மூதாட்டி கிணற்றில் சடலமாக மீட்பு!

துயரச் செய்திகள்

Update: 2025-01-07 03:21 GMT
ஆலங்குடி அருகே உள்ள வடக்கு கச்சிரான்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது தாயார் வீரம் மாள்(71). கடந்த 1ம் தேதி இரவு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கடந்த 3 தேதி சுப்பிரமணியன் மனைவி வளர்மதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதுதொடர்பாக சுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிந்து மூதாட்டியை தேடிவந்தனர். இந்நிலையில், அதே.கிராமத்தில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் வீரம்மாள் இறந்து கிடந்தது.தெரியவந்தது. தகவலறிந்ததும் ஆலங்குடி தீயணைப்பு நிலைய மீட்பு படையினர் வந்து மூதாட்டி உடலை மீட்டனர். மூதாட்டி கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News