கூகனூர் கிராமத்தை சேர்ந்த சண்முகநாதன் 7 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் பூக்கட்டும் வேலைக்கு சென்றார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சம்பளம் பற்றவில்லை என வேறு நிறுவனத்திற்கு சென்றுள்ளார். ஆனால் இதுவரை அவர் என்ன ஆனார் என தெரியவில்லை. அவருடைய மனைவி வினோதா பலமுறை தொடர்பு கொண்டும் அவருடன் பேச முடியவில்லை. இதனால் கணவனை கண்டுபிடித்து தரக் கோரி புதுகை மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் இன்று அவர் மனு அளித்தார்.