சேலம் உடையாபட்டி தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து விபத்து
காரில் மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல் ஒருவர் கைது
சேலம் உடையாபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இன்று காலை காரைக்காடு பாரத் பெட்ரோல் பங்க் அருகே வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற நபர்கள் மாசி நாயக்கன்பட்டி சோதனை சாவடியில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் கவிழ்ந்த காரை சோதனை செய்தபோது காரின் மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், மற்றும் குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. அப்போது வாகனத்தை ஓட்டி வந்த நபரை போலீசார் பிடித்தனர். உடன் வந்த நபர் தப்பி ஓடினார். பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது விசாரணையில் ராஜஸ்தான் மாநிலம் சைலா சாலூர் தாலுகா பகுதியை சேர்ந்த சுஜாரா மாலி 48 என்பதும், பெங்களூரில் இருந்து கும்பகோணத்திற்கு ஹான்ஸ், குட்கா போன்ற போதை பொருட்களை கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதனை எடுத்து போலீசார் சுமார் 50 கிலோ கொண்ட 30 மூட்டை ஹான்ஸ், குட்காவை பறிமுதல் செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர். தப்பியுடைய நபர் ராஜஸ்தான் மாநிலத் பகுதியை சேர்ந்த கன்பத்ராராம் போலீசார் தேடி வருகின்றனர்.