காளிப்பட்டி கந்தசாமி கோயில் அமாவாசை சிறப்பு பூஜை.
Update: 2023-10-14 10:00 GMT
மஹாளய பட்ச அமாவாசையை முன்னிட்டு காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.புரட்டாசி மாதம் வரும் மஹாலயா அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து விரதம் இருந்து வழிபட்டால் முன் ஜென்ம பாவங்கள் தீர்வதுடன் அனைத்து வகை செல்வங்களும் பெற்று வளமுடன் வாழலாம் என்பது நம்பிக்கை. அதற்கேற்ப மஹாலய அமாவாசையை முன்னிட்டு காளிப்பட்டி கந்தசாமி கோயில் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. மூலவர் கந்தசாமிக்கு பால்,
தேன், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த மகளை பெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.