சேலம் -சென்னை விமான போக்குவரத்து தொடக்கம்
By : King 24X7 News (B)
Update: 2023-10-29 16:02 GMT
விமானத்தில் பயணித்த நடிகை நமிதா
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சேலம் விமான நிலையத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 16ந்தேதி பெங்களூரு - சேலம் - கொச்சின் வழித்தடத்தில் விமான போக்குவரத்து தொடங்கியது. பின்னர் மறு மார்க்கமாக கொச்சின்- சேலம்- பெங்களூருவிற்கு விமான போக்குவரத்து தொடங்கிய நிலையில் இன்று சேலம் சென்னை இடையேயான மற்றொரு விமான போக்குவரத்தும் தொடங்கியது.
இதில் சென்னையில் இருந்து சேலம் வந்த முதல் விமானத்தில் கோவா கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை மற்றும் நடிகை நமீதா உட்பட 43 பயணிகள் வந்தனர். விமான நிலைய நிர்வாகம் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆகியோர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.