மத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை நட எதிர்ப்பு
மத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை நட எதிர்ப்பு
மத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை நட எதிர்ப்பு தெரிவித்து போலீசார் கிராமத்தில் முகாமிட்ட நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவாய்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள கவுண்டப்பனூர் அருந்தியர் காலனி கிராமத்தில் அருந்ததியர் இன மக்கள் சுமார் 45க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் தங்களது ஊரின் எல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் நட்டு விழா காலங்களில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று மாலை கொடிக்கம்பம் பழமையான நிலையில் அதனை புதுப்பித்து புதிய கொடிக்காம்பம் நட கிராம மக்கள் ஈடுபட்டிருந்த நிலையில் அங்கு வந்த மத்தூர் போலீசார் கொடி கம்பம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இதனால் கிராம மக்கள் போலீசார் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இந்நிலையில் இன்று காலை போலீசார் கிராம மக்களை விசாரணைக்கு அழைத்ததாக தெரிகிறது இந்நிலையில் போலீசார் சுமார் 30க்கும் மேற்பட்ட போலீசார் கிராமத்தில் முகாமிட்ட நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் குபேந்திரன் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மண்டல துணை செயலாளர் க.மோகன் என்கின்ற தமிழ் வளவன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கிராமத்திற்கு வந்து வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கூறுகையில் நேற்று இரவு கிராமத்தில் இருந்த பெண்களை சாதி பெயரை சொல்லி மத்தூர் காவல் நிலையத்தில் பணிசெய்து வரும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் உளவுத்துறை காவலர் ஜெயவேல் ஆகியோர் ஈடுபட்டதாகவும் மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லை எனில் விரைவில் தேதி அறிவித்து அந்நாளில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தெரிவித்தனர் மேலும் கிராம மக்கள் கூறுகையில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க சென்றால் வரிசையில் எங்களை நிற்க கூடாது என்றும் மேலும் அங்குள்ள அங்கன்வாடி பள்ளியில் குழந்தைகளை பாயில் படுக்கக் கூடாது என்றும் கீழே தள்ளி தரையில் அமர வைத்து உறங்க வைப்பதாகவும் மேலும் தண்ணீர் டம்ளரில் கொடுக்காமல் கையில் ஊற்றுவதாகவும் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்
இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதில் மாநிலத் துணைச் செயலாளர் அம்பேத்கர், மத்தூர் ஒன்றிய செயலாளர் பொன்சதீஷ், மத்தூர் ஒன்றிய துணை செயலாளர் திருப்பதி, வீரமணி, போச்சம்பள்ளி நகர செயலாளர்கள் செந்தில், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் இளையராஜா, மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடிகம்பத்தை புதுமையாக புதுப்பிக்கும் பணியின் பொழுது போலீசார் தலையிட்டு அங்கிருந்த கிராம மக்களை சாதி பெயரை சொல்லி கூறிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.