அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது

திருச்செங்கோட்டில் மாணவ நேசன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா போட்டியில் பங்கேற்ற மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது

Update: 2023-11-20 15:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிப்பு பள்ளிபாளையம் நவம்பர் 20 திருச்செங்கோட்டில் மாணவ நேசன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி, மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சு மட்டும் கட்டுரைப்போட்டி நடைபெற்றது...

இதில் மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்ற நிலையில், பள்ளிபாளையம் ஆவரங்காடு கிருஷ்ணவேணி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்விப் பயிலும் பத்தாம் வகுப்பு அ பிரிவு மாணவி தரணி தேவி பங்கேற்று, மாவட்ட அளவில் கட்டுரை போட்டியில் இரண்டாம் பரிசும் ரூபாய் 5000 ரொக்க பரிசும் பெற்றுள்ளார்..

அவருக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வானது பள்ளி வளாகப் பகுதியில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் குணசேகரன் மற்றும் ஆசிரியர்கள் என பலர் மாணவிக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்...

Tags:    

Similar News