தமிழ் பல்கலைக்கழகத்தில் இருநாள் சுவடியியல் பயிலரங்கம்
தமிழ் பல்கலைக்கழகத்தில் இருநாள் சுவடியியல் பயிலரங்கம் நடைபெற்றது.
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறை சார்பில், மேனாள் அமைச்சர் மறைந்த, எஸ்.என்.எம். உபயதுல்லா அறக்கட்டளை மற்றும் காசிமடம் குமரகுருபரர் மாநாட்டு அறக்கட்டளை இணைந்து இருநாள் சுவடியியல் பயிலரங்கம் புதன்கிழமை துவங்கியது.
துவக்க விழாவில், ஓலைச்சுவடித்துறை தலைவர் முனைவர் த.கலா ஸ்ரீதர் வரவேற்று பேசுகையில், முதன் முதலாக சுவடியிலிருந்து நூலாக வெளிவந்த தம்பிரான் வணக்கம் (கி.பி 1577) என்ற நூலைப்பற்றியும், ஓலைச்சுவடியில் பதியப்பட்டுள்ள அரிய மருத்துவக் குறிப்புகளை விளக்கியும், ஆவணச்சுவடிகளில் காணப்பெறும் குறியீடுகளையும், சமூக பொருளாதார நிலைகளை விளக்கிக் கூறினார். ப
ல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்து பேசியதாவது, மாணவ, மாணவிகள் படிக்கும் காலத்தில் தங்கள் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒழுக்க நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கட்டுரை எழுதுதல், கவிதை வாசித்தல் போன்ற கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்றார். இ
ப்பயிலரங்கில், தஞ்சாவூர் சரசுவதி மகால் ஓய்வு பெற்ற சுவடிப் பாதுகாப்பாளர் முனைவர் ப.பெருமாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சுவடிகளைப் பற்றியும் அதனை பாதுகாப்பது பற்றியும், சுவடிகளின் தோற்றம், வளர்ச்சி, சுவடிகளிலிருந்து நூல்கள் பதிப்பிக்கும் முறை, எவ்வாறு சுவடிகளை கையாள்வது பற்றியும், உலகில் பல்வேறு நாடுகளில் பாதுகாக்கப்படும் தமிழ்ச்சுவடிகளின் முக்கியத்துவத்தை பற்றியும் பேசினார். ப
ழமையான ஓலைச்சுவடிகள் மற்றும் அவை பாதுகாக்கப்படும் இடங்கள் பற்றியும் தெளிவாக கூறினார். அர்த்தசாஷ்த்திரம் என்னும் 14ம் நூற்றாண்டைச் சார்ந்த மிகப்பழமையான சுவடி நமது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து, கர்நாடக மாநில அருங்காட்சியகத்திற்க்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இராசராச சோழன் தேவாரப்பாடல்கலை மீட்டெடுத்த பொழுது நல்லெண்ணெய் கொண்டு சுவடிகள் தூய்மைப்படுத்தப்பட்டது" என்றார். பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் சி.தியாகராஜன் வாழ்த்திப் பேசுகையில், "சுவடியியல் பாதுகாப்பு அதன் பயன்பாடு பற்றியும், உ.வே.சாமிநாத அய்யர் என் சரிதம் என்னும் நூலில் சுவடிகளை சேகரிக்கும் பொழுது ஏற்பட்ட இன்னல்களை பதிவு செய்துள்ளதையும், அந்த வகையில் தமிழர்களின் மரபு பண்பாடு பழக்க வழக்கம் ஆகியவற்றை சுவடிகள் மூலமாக அறிந்து கொள்ளலாம்" என்றார்.
சுவடிப்புலத்தலைவர் முனைவர் த.கண்ணன் வாழ்த்திப் பேசினார். திட்ட உதவியாளர் அன்னபூரணி இணைப்புரை வழங்க, முனைவர் பட்ட ஆய்வாளர் த.அறிவழகன் நன்றி கூறினார்.