மருங்கூர் சுப்ரமணியசாமிக்கு மயிலாடியில் ஆராட்டு விழா.

Update: 2023-11-23 17:33 GMT
ஆராட்டு விழா
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டம் மருங்கூர் சுப்ரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் 6-வது நாள் சூரசம்காரம் நடந்தது. விழாவின் 10-ம் நாளான நேற்று சுப்ரமணியசாமிக்கு ஆராட்டு விழா மயிலாடி நாஞ்சில் புத்தனாறு கால்வாய் அருகே ஆராட்டு மடத்தில் உள்ள படித்துறையில் வைத்து நடைபெற்றது. இதற்காக சுப்ரமணியசாமி நேற்று மாலை 4 மணிக்கு வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மருங்கூரில் இருந்து மயிலாடிக்கு ஊர்வலமாக வந்தார்.       தொடர்ந்து சுப்ரமணியசாமிக்கு ஆராட்டு நடந்தது. மாலை 6 மணிக்கு புத்தனார் கால்வாய் படித்துறையில் வைத்து சாமிக்கு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடந்தது.       நிகழ்ச்சிக்கு விஜய் வசந்த் எம்.பி, குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

Similar News