புத்தகத் திருவிழா: எழுத்தாளர் வெங்கடேசன் பங்கேற்பு..!
விருதுநகர் KVS மேல்நிலைப்பள்ளி பொருட்காட்சி மைதானத்தில இரண்டாவது விருதுநகர் புத்தக திருவிழா வின் ஏழாம் நாள் கலை இலக்கிய அரங்கு நிகழ்ச்சியில், எழுத்தாளர் சு. வெங்கடேசன் “தமிழென்னும் பொய்யாக் குலக்குடி “ என்ற தலைப்பிலும், முனைவர் பர்வின் சுல்தானின்“புத்தகமே புத்தகமே“என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் சு. வெங்கடேசன் “தமிழென்னும் பொய்யாக் குலக்குடி “ என்ற தலைப்பில் பேசுகையில்:தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகத் திருவிழாவை நடத்தி அறிவிச்சுடரை ஏற்றி சாதனை புரிந்துள்ளது. சமீபத்தில் வந்த புள்ளி விவரங்கள் என்னவென்றால் தமிழகத்தில் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை நூலகங்கள் இருப்பதாகவும் கேரளாவில் 60 ஆயிரம் நூலகங்கள் இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
புத்தகம் சார்ந்த விஷயத்தை பெரிய இயக்கமாக புத்தக கண்காட்சியை மாவட்டம் தோறும் மாநில அரசு இவ்வளவு பெரிய இயக்கமாக நடத்திக் கொண்டிருப்பது, எவ்வளவு பெரிய பகுத்தறிவு அறிவொளியில் நிகழ்கிற ஒரு பெரிய நிகழ்வு எனவும், 2000 ஆண்டுக்கு முன்னால் எழுதப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை லட்சக்கணக்கான வாசகர்களிடம் பகிரும் புத்தகத் திருவிழாவை இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் நடத்த முடியும்.
2000 ஆண்டுகளாக இருக்கின்ற அறிவினுடைய தொடர்ச்சி நம் தமிழ் மொழிக்கு இருக்கின்றது. பிம்பேட்கா ஓவியங்களை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க கூடும். போபால் தலைநகரில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் இந்த பிம்பேட்கா என்ற இடம் உள்ளது. பிம்பேட்கா என்பது விந்திய சாத்பூரா மலைத்தொடரின் ஒரு பகுதி. இந்த மலைப்பகுதியில் சுமார் 700 குகைகள் உள்ளன.
இந்த 700 குகைகளில் சுமார் 500 குகைகளில் ஓவியங்கள் இருக்கின்றன. இந்த ஓவியங்கள் ஏறக்குறைய 30 ஆயிரம் ஆண்டுகளாக வரையப்பட்ட ஓவியங்கள். 30,000 ஆண்டுகள் தொடங்கி அதன் பிறகு பின் தொடர்ந்து சுமார் 3000 ஆண்டுகள் வரை இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. 30 ஆயிரம் ஆண்டுகள் தலைமுறை தலைமுறையாக அந்த குகைகள் முழுக்க வரையப்பட்ட ஓவியங்கள் என கூறினார்.