மழைநீர் அகற்றும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
மழைநீர் அகற்றும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது இந்த நிலையில் நேற்று இரவு 12 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தது இதன் காரணமாக பகுதியில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது குறிப்பாக தூத்துக்குடி பழைய மாநகராட்சி பிரதான வஉ சி சாலை மழை தண்ணீர் தேங்கியுள்ளது இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இந்த பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு சாலையில் தேங்கி உள்ள தண்ணீரை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டார்.
மேலும் டபுள்யு ஜி சி ரோடு ரயில்வே ஸ்டேஷன் ரோடு திரேஸ்புரம் லூர்தம்மாள் புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் தேங்கியுள்ள மழை நீரை இயந்திரங்கள் மூலம் வெளியேற்றும் நடக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார். தொடர்ந்து மாநகராட்சி முழுவதும் எந்த பகுதியில் தண்ணீர் தேங்காதவாறு உரிய நடவடிக்கைகள் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் டெங்கு உள்ளிட்ட மழைக்காலங்களில் பரவும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் மாநகராட்சி பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். இந்த ஆய்வின்போது சுகாதார குழு தலைவர் எஸ் சுரேஷ் குமார், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், சுகாதார ஆய்வாளர் ஹரி கணேஷ் மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.