ராமநாதபுரத்தில் இ பட்டா வழங்கல்

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு1028 பயனாளிகளுக்கு இலவச இ- பட்டாவினை ராமநாதபுரம் மாவட்டம் அருகே புல்லாங்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று வழங்கப்பட்டது.

Update: 2023-11-25 11:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராமநாதபுரம் மாவட்டம் புல்லங்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக அரங்கில் ராமநாதபுரம் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் ராமேஸ்வரம் கீழக்கரை ராமநாதபுரம் போன்ற பகுதிகளுக்கு மொத்தம்1028 பயனாளிகளுக்கு இலவச இ-பட்டாவினை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இவ்விழா ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடந்தது. இதில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் திருவாடானை (காங்கிரஸ்)சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம்,ஊராட்சி ஒன்றிய குழு‌ தலைவர் பிரபாகரன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு இலவச இ-பட்டாக்களை வழங்கினர். இதில் முன்னிலை வைத்து பேசிய ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம் கலைஞர் அவர்கள் ஏராளமான திட்டங்களை இந்த மாவட்டத்திற்கு வழங்கியுள்ளார் அதை போன்று தளபதி முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முதல்வராகி ராமநாதபுரத்திற்கு என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதற் கிணங்க மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மீனவர்கள் மாநாட்டிற்கு வந்த போது 4000 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கினார்.ஆதி திராவிட நலத்துறை மூலம் 5375 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம்1808 பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது தவிர 4000 பேர் வீட்டு மனை பட்டா கேட்டு மனு செய்துள்ளனர் அவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் கூறினார்.

Similar News