பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து முதல் போக பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டது
விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு பகுதி யில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து முதல் போக பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விடபட்டது. வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதியில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக 47.56 அடி முழு கொள்ளளவு கொண்ட பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 44.33 அடியாகவும், 42.64 அடி கொள்ளளவு கொண்ட கோவிலாறு அணையின் நீர்மட்டம் 35 அடியாகவும் உயர்ந்தது. மே
லும் பெரியாறுஅணைக்கு வினாடிக்கு 29.59 கனஅடி நீரும், கோவிலாறு அணைக்கு 40.59 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. பிளவக்கல் பாசன திட்டத்தின் 8531.17 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றனர்.. தற்பொழுது பாசனத்திற்காக பெரியாறு அணையின் மூலம் 27.11.2023 இன்று முதல் 7 நாட்களுக்கு வினாடிக்கு 150 கனஅடி வீதமும், நேரடி கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 3.00 கனஅடி வீதம் 29.02.2024 வரையிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீரை ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ்,விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் திறந்து வைத்தனர். இத்தண்ணீர் திறப்பினால் பிளவக்கல் திட்டத்தின் கீழ் உள்ள 40 கண்மாய்களின் 7219 ஏக்கர் விவசாய நிலங்களும், பெரியாறு பிரதானக்கால்வாய் நேரடி பாசனத்தின் மூலம் 960 ஏக்கர் விவசாய நிலங்களும் பயனடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் S.கொடிக்குளம், கான்சாபுரம், மகாராஜபுரம், வ.புதுப்பட்டி,
வத்திராயிருப்பு. கூமாபட்டி, சுந்தரபாண்டியம், நத்தம்பட்டி, மூவரைவென்றான். மங்கலம், செம்மாண்டிகரிசல்குளம், பாட்டக்குளம் சல்லிபட்டி, விழுப்பனூர், தச்சகுடி, கிருஷ்ணபேரி,நெடுங்குளம்.குன்னூர் ஆகிய 17 வருவாய் கிராமங்கள் பயனடையவுள்ளது. இந்த தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சி முருகன், வத்திராயிருப்பு அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சேதுவர்மன் மற்றும் அரசு அதிகாரிகள்,அரசியல் கட்சி பிரமுகர்கள் விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.