கோவில் யானைக்கு கற்சிலையுடன் மணிமண்டபம் - அடிக்கல் நாட்டு விழா

ரூபாய் 49 புள்ளி 50 லட்சம் மதிப்பீட்டில் கற்சிலை கட்டப்படுகிறது.

Update: 2023-12-03 09:43 GMT

அடிக்கல் நாட்டப்பட்டது 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் குன்றக்குடி தேவஸ்தானத்துக்குட்பட்ட பிரசித்தி பெற்ற சிவகாமி அம்பாள் சமேத திருத்தளிநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவகாமி யானை இருந்தது. 5 வயதிலிருந்து கோவிலில் வளர்க்கப்பட்டு வந்த இந்த யானை கடந்த 2021 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் 57ஆவது வயதில் உயிரிழந்தது.

பின்னர் கோவில் வளாகத்திலேயே யானையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் யானைக்கு மணிமண்டபம் கட்ட கோரிக்கை எழுந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூபாய் 49.50 லட்சத்தில் யானைக்கு 7 அடி உயர கற்சிலையுடன் மணிமண்டபம் கட்டப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ன.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து மணிமண்டபத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்

Tags:    

Similar News