திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நிதி நிறுவனத்தில் பாதிக்கப்பட்ட களப்பணியாளர்கள் மற்றும் முதலீட்டார்கள் மழையும் பொருட்படுத்தாமல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-09 06:31 GMT

பாதிக்கப்பட்டவர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் தனியார் நிதி நிறுவனத்தில் பாதிக்கப்பட்ட களப்பணியாளர்கள் மற்றும் முதலீட்டார்கள் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மழையும் பொருட்படுத்தாமல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1983 ராஜஸ்தான் மாநிலம் ஜெயிப்பூரை தலைமை இடமாகக் கொண்டு pearls green forest என்ற நிறுவனம் நிர்மல்சிங்பாங்கு என்பரால் தொடங்கப்பட்டது. அதன் பிறகு 1996 ஆம் ஆண்டு டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு PACL ( Peras agrotech corporation limited) என்ற பெயரில் செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் நாடு முழுவதும் சுமார் 5.85 கோடி முதலீட்டாளர்கள் 49 ஆயிரத்து 100 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். மேலும் தமிழகத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி முதலீட்டாளர்கள் ஏறத்தாழ 10 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளனர்.

இந்த நிலையில் செபி( SEBI) அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கடந்த 22.8.2014 ஆம் ஆண்டு சட்ட திட்டங்களுக்கு உகந்தது அல்ல எனக் கூறி PACL நிறுவனத்தை மூடக்கோரி தீர்ப்பு வழங்கியது.   

இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் மற்றும் சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்கள் 1000கோடி ரூபாய் அளவில் இந்த நிறுவனத்தில் பணத்தை செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் 2014 ஆண்டிலிருந்து இதுவரை இந்த நிறுவனத்தில் இருந்து பணம் பெற முடியவில்லை.

.இதன் காரணமாக முதலீட்டாளர்கள் களப்பணியாளர்களிடம் கேட்கும்பொழுது தாங்களும் உங்களைப் போல் ஏமாந்து உள்ளார்கள் எனக் கூறியுள்ளனர். இதன் காரணமாக பணத்தை மீட்டு தரக்கோரி களப்பணியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கொட்டும் மழையிலும் கொடை பிடித்தவாறு கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News