பொங்கல் கொண்டாட்டம்
சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு பொங்கல் கொண்டாட்டம் நடந்தது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தைப்பொங்கல் திருவிழா ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கொண்டாடப்பட்டது.
இதையொட்டி நீதிமன்றம் முன்பு கரும்பு, மஞ்சள் குழை, தோரணங்கள் கட்டப்பட்டு அலங்கரித்து வைக்கப்பட்டன. இதன் பின்னர் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி நரசிம்ம மூர்த்தி,குற்றவியல் நீதித்துறை நடுவர் சிவா ராஜேஷ், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மகாலட்சுமி, சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா ஆகியோர் பங்கேற்று பொங்கல் பானையில் அரிசி இட்டும், கரண்டியால் பொங்கல் பானையில் உள்ள அரிசியை கிண்டியும் தொடக்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து நாட்டுப்புற இசையுடன் வழக்கறிஞர்கள் ஆடி பாடி தைப்பொங்கல் திருவிழாவைக் கொண்டாடினர்.
இதில் சங்கரன்கோவில் வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந் ஆண், பெண் வழக்குரைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை வழக்குறிஞ்சர்கள் சங்கத் தலைவர் சிவராமன் செயலாளர் ஆர் காந்தி குமார் அரசு வழக்குரைஞர்கள் ஜெயக்குமார் கண்ணன் அருணாச்சலம் மற்றும் பலர் செய்திருந்தனர்.