புயல் மற்றும் இயற்கை பேரிடர்களில் நிவாரண பொருட்களை வழங்கியவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்
புயல் மற்றும் இயற்கை பேரிடர்களில் நிவாரண பொருட்களை வழங்கியவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-30 14:32 GMT
பாராட்டு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்
கடந்த மாதத்தில் சென்னையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் மற்றும் கனமழை போன்ற இயற்கை பேரிடர்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் சார்பில் குடிநீர்,உணவு பொருட்கள், பால் பவுடர், போர்வைகள், துணி வகைகள் உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்களை வழங்கினர் நிவாரண பொருட்களை வழங்கிய அரசுத்துறையினர், தொண்டு நிறுவனத்தினர் மற்றும் தன்னார்வலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.