தானியங்கி மழைமானி நிலையங்கள் மற்றும் தானியங்கி வானிலை மையங்கள் நிறுவப்படும் ஆட்சியர் அறிவிப்பு

தானியங்கி மழைமானி நிலையங்கள் மற்றும் தானியங்கி வானிலை மையங்கள் நிறுவப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Update: 2024-02-17 09:46 GMT
மாவட்ட ஆட்சியர் கே எம் சரயு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆட்சியர் அலுவலக மூலமாக அறிவிப்பு தானியங்கி மழைமானி நிலையங்கள் மற்றும் தானியங்கி வானிலை மையங்கள் நிறுவப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தகவல் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு அரசு மழை அளவு மற்றும் பல்வேறு பருவநிலைகள் குறித்தான சரியான புள்ளி விபரங்களை பெற வேண்டி புதியதாக தானியங்கி மழை மானிகளையும், தானியங்கி வானிலை மையங்களையும் அமைத்திட உத்திரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டஆட்சித்தலைவர் திருமதி கே.எம்.சரயு, இ.ஆ.ப.அவர்கள் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு அரசு மழை அளவு, பருவநிலைகள், காலநிலை மாற்றம் தொடர்பான புள்ளி விபரங்களை பெறுவதற்காக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள 16 மழை மானி நிலையங்கள் தவிர புதியதாக 52 தானியங்கி மழை மானி நிலையங்கள் அமைத்திடவும், நான்கு தானியங்கி வானிலை மையங்கள் அமைத்திடவும் முடிவு செய்யப்பட்டு, அதற்கான இடங்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலக வளாகங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட மழை மானி நிலையங்கள் மற்றும் தானியங்கி வானிலை மையங்கள் அமைத்திட தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களை சம்மந்தப்பட்ட பொறியியல் நிறுவனத்தினர் தற்போது தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேற்கண்ட தணிக்கையின் அடிப்படையில் இடம் தேர்வு செய்யப்பட்டு தானியங்கி மழை மானிகள் மற்றும் தானியங்கி வானிலை மையங்கள் அமைத்திட நடவடிக்கை தொடரப்படும். இதற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் துவங்கப்படஉள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு  அவர்கள் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News