அரசுப் பள்ளியில் நவீன வசதியுடன் கூடிய கழிப்பறை திறப்பு
பிக்கிலி கொல்லப்பட்டி மலை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு (MPLADS) நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன வசதியுடன் கூடிய கழிப்பறை திறப்பு
Update: 2024-02-23 05:00 GMT
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி பிக்கிலி கொல்லப்பட்டி மலை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு (MPLADS) நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன வசதியுடன் கூடிய கழிப்பறை கட்டிடத்தை பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பாட்டிற்காக தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவ செந்தில்குமார் அவர்கள் திறந்து வைத்தார்.. இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சபரிநாதன், தருமபுரி மேற்கு மாவட்ட கழக பொதுக்குழு உறுப்பினர் குட்டி, மாவட்ட கழக இளைஞரணி துணை அமைப்பாளர் பி.என்.சி.மகேஷ்குமார், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எஸ்.ஆர். பிரகாஷ், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியப் பெருமக்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.