மண்ணெண்ணை ஸ்டவ்-ல் சமையல் செய்த இளம் பெண் தீ பிடித்து உயிரிழப்பு

மண்ணெண்ணை ஸ்டவ்-ல் சமையல் செய்த இளம் பெண் தீ பிடித்து உயிரிழப்பு.

Update: 2024-03-09 15:34 GMT

காவல் நிலையம் 

 கரூர் மாவட்டம், க.பரமத்தி காவல் எல்லைக்குட்பட்ட, உப்பு பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா- சண்முகம் மகள் பிரியா வயது 28. பிரியாவுக்கும் சிவா என்பவருக்கும் திருமணம் முடிந்து இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இதனிடையே கணவன் மனைவிக்கு ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, கடந்த ஒரு வருடமாக பிரியாவும் சிவாவும் தனித்தனியாக வசித்து வந்தனர். இதில் பிரியா கரூர் மாவட்டம், க. பரமத்தி அருகே உப்பு பாளையம் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் பிப்ரவரி 27ஆம் தேதி இரவு 7 மணி அளவில் வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பை பயன்படுத்தி சமையல் செய்து கொண்டு இருந்தார் பிரியா. அப்போது எதிர்பாராத விதமாக பிரியாவின் ஆடைகளில் தீ பற்றியது. தீயை அணைக்க முயற்சித்தும் 60% அவரது உடலில் தீப்பற்றி காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சையில் இருந்து வந்த பிரியா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பிரியாவின் தாயார் மல்லிகா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த பிரியாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து,இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் க. பரமத்தி காவல்துறையினர்.

Tags:    

Similar News