தஞ்சாவூர் அருகே கொலைமிரட்டல்: ஒருவர் கைது
தஞ்சாவூர் அருகே கொலைமிரட்டல் செய்த ஒருவர் கைது;
Update: 2024-03-23 17:05 GMT
கைது
தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் அன்னை தெரசா நகர் பகுதி யைச் சேர்ந்தவர் கனகராஜ் மகன் திருநாவுக்கரசு (36). இவருக்கும் இவரது தம்பி திருவாசகத்திற்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வீட்டின் அருகில் ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்த திருவாசகத்திடம் அப்புறப்படுத்த திருநாவுக்கரசு கூறியதற்கு திருவாசகம் அப்பகுதியைச் சேர்ந்த குமரேசன், சூரி, கார்த்தி ஆகியோரை அழைத்து வந்து பிரச்னை செய்துள்ளார். அப்போது வெற்றி திருநாவுக்கரசு கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பூதலுார் போலீசில் திருநாவுக்கரசு புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாரதி வழக்கு பதிந்து வெற்றி என்றகுமரேசனை கைது செய்து மற்றவர்களை தேடிவருகின்றனர்.