வேளாண் கல்லுாரி மாணவிகளுக்கு சிறுதானிய உணவு தயாரிப்பு பயிற்சி
வேளாண் கல்லுாரி மாணவிகளுக்கு சிறுதானிய உணவு தயாரிப்பு பயிற்சி முகாம் நடந்தது.
Update: 2024-03-24 15:18 GMT
திருவையாறு அருகே காருகுடி ஊராட்சியில் தஞ்சை ஆர்விஎஸ் வேளாண் கல்லுாரி 4ம் ஆண்டு மாணவிகளின் ஊரக வேளாண் பணித் திட்டத்தின் கீழ், சுகா டயட் நேச்சுரல் புட் சிறு தொழில் சிறுதானிய உணவு தயாரிப்பு நிறுவனத்தில் பயிற்சி முகாம் நடந்தது. சிறு தொழில் நிறுவனர் ராஜேஸ்வரி டயட் உணவுகள் தயாரிப்பது, அதனை சந்தைப்படுத்துதல், தயாரிக்கப்படும் உணவுகளில் என்ன சத்து உள்ளது. அதனை நுகர்வோர் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கூறி தயாரிப்பு முறை களை செயல்விளக்கமாக செய்து காண்பித்தார். சிறு தொழில் வழங்க அரசு தரும் கடன் உதவிகள் குறித் தும் அதனை பெறுவது தொடர்பான வழிமுறை குறித்தும் விளக்கினார்.மாணவிகள் குழுத் தலைவர் சவிதாஸ்ரீ, ஸ்வீட்டி, சவுமியா, ஷெர்லின், இன்பபி ரியா, ஷாலினி, சினேகப்பிரியா, சவுபத்ஷமிமா ஆகி யோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சினேகா, சிந்து, சுவேதா, கிருஷ்ண லட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.