சிதம்பரத்தில் இன்று உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்
விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் சிதம்பரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.;
Update: 2024-03-31 12:55 GMT
உதயநிதி ஸ்டாலின்
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆதரவாக பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு சிதம்பரம் நகரத்தில் இன்று திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். உடன் திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.