அகில இந்திய வர்த்தக சங்கத்தில் அமைச்சர் வாக்கு சேகரிப்பு
தூத்துக்குடியில் அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தில் அமைச்சர் கீதாஜீவன் திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.
தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்திற்கு வருகை தந்த தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவனை சங்கத் தலைவர் டி.ஆர்.தமிழரசு சங்க பொதுச் செயலாளர் எஸ்.சங்கர் மாரிமுத்து, துணைத் தலைவர்கள் பி.பிரேம் வெற்றி, டி.ஆர்.பாலமுருகன், இணைச் செயலாளர் எஸ்.ராஜேஷ் பாலசந்திரன், சங்க செயற்குழு உறுப்பினர் எஸ்.பாலா சங்கர், பி.பொன்குமரன் மற்றும் ஆர்.ரமேஷ் ஆகியோருடன் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றனர்.
அமைச்சருடன் காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், திமுக மாநகர செயலாளர் ஆர்.ஆனந்த சேகரன், ராஜ்மோகன் செல்வின், ஜீவன் ஜேக்கப், ஆகியோர் வருகை புரிந்தனர். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழி கருணாநிதியின் 5 ஆண்டு கால சாதனைகளை அமைச்சர் பி.கீதா ஜீவன் எடுத்துரைத்து, ஏப்.19 அன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் கனிமொழி கருணாநிதிக்கு வாக்களிக்கக் கேட்டுக் கொண்டார்.