ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர் மாயம்: உறவினர்கள் கோரிக்கை

சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் குஜராத் மாநிலத்தில் ஆழ் கடலில் மயமானதை தொடர்ந்து மீட்க கோரி உறவினர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2024-04-16 12:40 GMT

மாயமான மீனவர்

குமரி மாவட்டம்சின்னத்துறை செந்தெங்குவிளாகம் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டின்.மீனவர். இவர் உள்பட 11மீனவர்கள் ஒரு விசைப்படகில் கொச்சிதுறைமுகத்தில் இருந்து கடந்த 5-ந் தேதி ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கடந்த 12-ந் தேதி இரவு குஜராத் மாநிலம் போர் பந்தர் கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது படகில் இருந்த கிறிஸ்டின் திடீரென மாயமானார்.

இதுகுறித்து படகில் இருந்த சக மீனவர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரி வித்தனர். இதை அறிந்த கிறிஸ்டின் மனைவி மற்றும் குழந்தை கள் மிகவும் அதிர்ச்சியுற்றனர். மேலும் மாயமான மீனவரை தேடி கண்டு பிடிக்க மத்திய,

மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணி மத்திய, மாநில அரசுகளுக்கு இன்று காலை கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.மாயமான மீனவர்கிறிஸ்டினுக்கு ஷீலா என்ற மனைவியும், அர்ச்சனா (21), கீர்த்தனா (19), மெர்சி (17) என 3 மகள்களும், அஜய் கிறிஸ்டின் (19) என்ற மகனும் உள்ளனர்.

Tags:    

Similar News